Thursday, 30 June 2016

Engg

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்' பின்னடைவு ஏன் : பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை பின்னணி

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில், விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கான கவுன்சிலிங் நடந்த இரு நாட்களிலும், பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாக மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இ.சி.இ., எனப்படும், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' துறையை தேர்வு செய்துள்ளனர். கவுன்சிலிங் துவங்கிய முதல் நாளிலேயே, சென்னை, அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரி, அரசு உதவி பெறும் கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி, மதுரை தியாகராஜா கல்லூரி போன்றவற்றில் இந்த படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. மற்ற முன்னணி கல்லூரிகளிலும், இ.சி.இ., மற்றும் கம்யூ., சயின்ஸ் இடங்கள் நிரம்பி விட்டன. அதேபோல், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன்ஸ்' பிரிவிலும் மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர். இ.சி.இ.,க்கு அடுத்தபடியாக, மெக்கானிக்கல் படிப்பில் மாணவர்கள் சேர்ந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல், மெக்கானிக்கல் பிரிவுக்கு தற்போது அதிக போட்டி இல்லாத நிலை உள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் துறைக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை.மெக்கானிக்கல் படிப்பு பின்னடைவை சந்தித்ததற்கு, வேலை வாய்ப்பின்மையும், குறைந்த சம்பளமுமே காரணம் என,கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: கம்யூட்டர் சயின்ஸ் அறிமுகமான பின், அதற்கான மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கலுக்கு அதிக போட்டி இல்லை. இந்த நிலைக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம். கடந்த கல்வியாண்டில், தரவரிசையில் முதலில் உள்ள, 50 கல்லுாரிகளில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் சார்ந்த தொழிற்சாலை நிறுவனங்கள், வெறும், 8 சதவீதம் மட்டுமே வேலை அளித்துள்ளன. அடுத்த கட்டத்திலுள்ள கல்லுாரிகளில், 40 - 50 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

அவர்களுக்கு மாதம், 8,000 ரூபாய் தான் சம்பளம் கிடைத்தது. முதல் தர கல்லூரிகளில், ஐ.டி., நிறுவன வேலைவாய்ப்பில், 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் கிடைத்துள்ளது.அவற்றில் ஐ.டி., நிறுவனங்களே அதிக வேலைவாய்ப்பை அளித்துள்ளன. அதனால் தான், மெக்கானிக்கல் பின்னுக்கு தள்ளப்பட்டு, கம்யூ., சயின்ஸ் மற்றும் அதை சார்ந்த படிப்புகள் முன்னிலைக்கு வந்துள்ளன, என்றார்.

Friday, 17 June 2016

தேவையுள்ள இடத்தில் தொழில் தொடங்குவதே வெற்றிக்கு வழி

ஒ ரு தொழிலில் தேவைக்கு அதிகமானவர்கள் நுழைந்தால் அந்த தொழில் போதிய வருமானமின்றி பாதிக்கப்படும். அதில் ஈடுபடுபவர்கள் திணறிப் போவார்கள். எந்தத் தொழிலும் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் கட்டுப்படியாகக் கூடிய இலாபம் கிடைக்க வேண்டும். போதிய இலாபம் இல்லாவிட்டால் தொழில் நசிந்து போகும்.
1980களில் முதலில்
ஜெராக்ஸ் கடை வைத்தவர்கள் நல்ல லாபம் ஈட்டினார்கள். அப்போதே ஒரு பக்கம் ஜெராக்ஸ் எடுக்க ஒரு ரூபாய். வேலையும் எளிதான வேலை. ஒரு "ஜெராக்ஸ் மிஷினை வாங்கிப்போட்டால் ஒரு ஆளை வைத்து சமாளித்துக் கொள்ளலாம்". அதில் வந்த இலாபத்தைப் பார்த்து பலர் அந்தத் தொழிலில் இறங்கினர். தேவைக்கு மேல் ஜெராக்ஸ் கடைகள் பெருகவே யாருக்கும் போதிய வருமானமில்லை. நிறைய வாடிக்கையாளர்கள் உள்ள கடைகள் எப்படியோ நடந்தன. தடுமாறிக் கொண்டிருந்த கடைகள் ஒரு ரூபாய் என்றிருந்ததை 75 பைசாவுக்கும் பிறகு 50 பைசாவுக்கும் குறைத்துப் பார்த்தார்கள்.
அப்போதெல்லாம் முக்கியமான பத்திரங்களுக்கு மட்டுமே ஜெராக்ஸ் எடுப்பார்கள். முக்கிய தஸ்தாவேஜூகள், சர்டிபிகேட்கள் போன்றவைகளுக்கு மிகக் குறைவான அளவிலேயே ஜெராக்ஸ் எடுக்கிற பழக்கம் இருந்தது. அதனால் விலை குறைத்தாலும் தொழில் நடக்கவில்லை. தொடர்ந்து கட்டுப்படியாகவில்லை என்றால் என்ன நடக்கும்? பல கடைகள் மூடப்பட்டன. தாக்குபிடித்து நின்றவர்களுக்கு வியாபாரம் கூடியது. வலுவடைந்து நிலைத்தார்கள்.
இதிலிருந்து தெரிவது என்ன? எளிதாக இலாபம் வருகிற தொழிலில் பலபேர் இறங்குவார்கள். தேவைக்கு மேல் தொழில் பெருகினால் போதிய வருமானம் ஈட்ட முடியாது. வருமானம் இல்லாவிட்டால் தொழில் நிலைக்காது.
தேவைக்கு மேல் இருக்கிறவர்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் மூடிவிட்டு செல்வார்கள். அதன் பிறகு தொழில் ஸ்திரப்படும். தாக்குப் பிடித்து தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
தேவையே ஒரு தொழிலுக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. நாம் நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில் தொழிலை ஆரம்பித்து விடமுடியாது. தொழில் தொடங்குவதற்கான தேவை அங்கே இருக்க வேண்டும். தேவை இருக்கிற இடத்தில் ஆரம்பிக்கிற தொழிலே நிலைக்கும்.
ஓர் இடத்தில் மளிகைக்கடை ஆμம்பிக்கப் போகிறோம் என்றால் அங்கே ஒரு கடை
திறப்பதற்கான தேவை இருக்க வேண்டும். தேவை இருக்கிற இடத்தில் ஆரம்பித்தாலே வெற்றி பெற முடியும். தேவை இல்லாத இடத்தில் ஆரம்பித்தால் சிக்கல்தான்.
அதிக வருமானம் ஈட்டுகிற பிரிவினர் வாழும் பகுதிகளில் கடை ஆரம்பிப்பது உயிரோட்டமான வியாபாரம் நடைபெற உறுதுணையாகும். அங்கே வியாபாரம் செய்தால் செழிக்க முடியும். சம்பாதிக்க முடியும்.
வாய்க்கும் வயிற்றுக்கும் சம்பாதிக்கிற பிரிவினர் உள்ள வறண்ட ஏரியாவில் கடை ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்காது. முன்னேற்றம் முடங்கிப் போகும். அன்றாட போரட்டமாக நமது வியாபாரம் ஆகிவிடும். நடுத்தர வருவாய் பிரிவினர் இருக்கிற இடத்திலும் தொழில் செழிக்கும். பணப் புழக்கம் அதிகமாய் உள்ள இடத்தில் ஆரம்பிக்கிற வியாபாரம் ஓங்கி வளரும். பல தெருக்கள் கூடும் ஜங்சனாக விளங்குகிற இடத்தில் தைரியமாக தொழில் ஆரம்பிக்கலாம். அப்போது கூட அங்கே எத்தனை கடைகள் உள்ளன? அங்கே வந்து கூடும் தெருக்களில் மொத்தம் எத்தனை வீடுகள் இருக்கின்றன? எப்படிப்பட்ட வருமானப் பிரிவினர் வசிக்கின்றனர்? இப்போதுள்ள கடைகளில் எந்த அளவு வியாபாரம் நடக்கிறது? ஒவ்வொரு கடையிலும் நல்ல வியாபாரம் நடக்கிறதா? அல்லது கடைகள் காற்றாடுகின்றனவா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.
அங்கே வசிக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு கடைகள் இல்லாத பட்சத்தில், அங்கே ஒரு கடை தேவைப்படும். ஆனாலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அங்கேயுள்ள கடைகளில் நடக்க வேண்டிய அளவு வியாபாரம் இல்லை என்றால் என்ன காரணம்? மக்கள் எதிர்பார்க்கும் அளவு சரக்குகள் இல்லையா? விலை அதிகம் வைத்து விற்கிறார்களா? அங்குள்ளவர்கள் வெளி இடங்களில் சென்று வாங்கி வருகிறார்களா என்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். பல விஷயங்களையும் ஆராய்ந்து அங்கே ஒரு கடைபோட்டால் வெற்றிபெற முடியும் என்று முடிவெடுத்த பிறகு, நமது கடை எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
நமக்கே ஒரு தெளிவு வேண்டும். தெளிவான கண்ணோட்டத்துடன் தீர்க்கமாக திட்டமிட்டு ஆμம்பிக்கிற கடைகள்தான் வெற்றிபெற முடியும்.
ஜங்சன்களில் கடை ஆரம்பிக்கிறவர்கள் சற்றே பெரிய அளவில் கடைபோடுவது நல்லது. கடை பளீச்சென்று தனித்தன்மையோடு இருக்க வேண்டும். கவர்ச்சிகரமான முறையில் ரேக்குகள் அமைத்து, நிறைய சரக்குகள் வைத்து, வாடிக்கையாளர்களை கவரும்படியாக கடை ஆரம்பித்தால் எடுத்த எடுப்பிலேயே வியாபாரம் சூடு பிடித்து விடும். சற்றே பெரிய இடம் கிடைத்தால் டிபார்ட்மெண்ட் ஸ்டோராகவே ஆரம்பிக்கலாம். ஆரம்ப விழாவையொட்டி ஏதாவது பரிசுத்திட்டத்தை அறிவிக்கலாம். நோட்டீஸ் அடித்து அந்த பகுதி முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கச் செய்யலாம். குறிப்பிட்ட தொகைக்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு கூப்பன்களை வழங்கி, குலுக்கல் மூலம் பரிசு வழங்கலாம். அல்லது இலவசமாக ஒரு கைப்பையோ, ஏர் பேக்கோ கொடுக்கலாம். குறைவான விலைக்கு விற்கிற பொருட்களின் விலையை கடைக்கு வெளியே விளம்பரப் பலகையில் எழுதி வைக்கலாம்.
திடீரென விலை குறையும் பொருட்களின் விலையை எழுதி வைப்பது மக்களைக் கவரும். வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் நீங்கள் செயல்பட வேண்டும். அதற்கு அவர்கள் மனதில் இடம் பிடிக்கும்படியான ஏதாவது ஓர் உத்தியை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். உங்கள் கடை நியாயமான விலையில் தரமான பொருட்களை விற்கிற சிறந்த கடை என்பதை வாடிக்கையாளர் மனதில் பதிய வைப்பதில் ஆரம்பத்திலேயே வெற்றிபெற்று விட்டால் உங்கள் வியாபாரம் செழித்தோங்கும்.
தெருக்களுக்குள் கடைவைப்பவர்கள், அங்குள்ள வியாபார நிலவரத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏற்கனவே கடை வைத்திருப்பவர்களுக்கு உறுதியான வாடிக்கையாளர் அடித்தளம் இருக்கும். அங்கே கடை போட்டால் நாம் வெற்றிபெற முடியுமா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். சிலர் அக்கறை இன்மை காரணமாக வியாபாμத்தை இழந்திருப்பர். சிலருக்கு வியாபாரத்திலிருந்து அதிக பணத்தை எடுத்ததன் மூலமாக முதலீடு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். கடையில் போதிய சரக்கு இல்லாததால் பக்கத்தில் உள்ள கடைக்கு வாடிக்கையாளர்கள் சாய்வார்கள். அங்கும் சமாளிக்க முடியாமல் கூட்டம் இருக்கும். அப்போது அங்கே ஒரு புதிய கடை தேவைப்படும். அந்த தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கடை ஆரம்பித்தால் வெற்றிபெற முடியும்.
ஒரு தெருவுக்குள் தேவைக்கு மேல் கடைகள் இருந்தால் ஒருவருக்கும் போதுமான அளவில் வியாபாμம் நடக்காது. தேவையற்ற நியாயமற்ற போட்டி நிலவும். ஒவ்வொருவரும் விலையைக் குறைத்து விற்று வியாபாரத்தைத் தக்கவைக்க முயற்சிப்பார்கள். யாருக்குமே போதுமான இலாபம் கிடைக்காது.
பலவீனமானவர்கள் வீழ்ச்சி அடைந்து கடையை மூட வேண்டிவரும். அதன் பிறகுதான் நிலைமை சீராகும். அதுரை தாக்குப் பிடிக்க நேரிடும். தெருவுக்குள் கடை ஆரம்பிக்க முடிவு செய்பவர்கள், அங்குள்ள நிலவரத்தை நன்கு எடைபோட்டு திருப்தி அடைந்த பிறகே தொடங்க வேண்டும். மொத்தத்தில் நாம் கடை போட வேண்டுமானால் அங்கே ஒரு தேவை இருக்க வேண்டும். தேவை உள்ள இடத்தில் கடை ஆரம்பிப்பதே வெற்றிக்கு வழிவகுக்கும்

Wednesday, 15 June 2016

காசு கொடுத்து குப்பையை வாங்கும் இந்தியா

உலக நாடுகளின் மின்னணுக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை விலைக்கு வாங்கி, இந்தியத் தொழிலதிபர்கள் லாபம் பார்த்து வருவதன் மூலம் இந்தியா மிகப்பெரிய குப்பை கிடங்காக உருமாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்போது ஏற்பட்ட கட்டிடக் குப்பைகள் மற்றும் நச்சுக் கழிவுகள் அனைத்தும் பிரொஸ்னா, ஷென்குவான் ஹை, பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு, அதுவும் சென்னைக்கு வந்தன.
இந்த குப்பையில் அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின், பாலி குளோரினேடட் பைபினல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன.
ஆனால், வெளி உலகிற்குத் தெரியாமல் இது போன்று பல்வேறு வெளிநாட்டுக் குப்பைகள் இந்தியாவிற்கு வந்தவண்ணம் உள்ளன.
சுற்றுச்சூழலைக் குறித்துக் கவலைப்படாத இந்திய தொழிலதிபர்கள் சிலரின் பேராசையால் இந்தியா இவ்வாறு குப்பை மேடாக மாறி வருகிறது என்கிறது ஆய்வுகள்.
அதிலும் குறிப்பாக உலகநாடுகளுக்கு மின்னணுக் கழிவுகளைஅகற்றுவது தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவற்றிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கிய பின்தான், அவற்றை குப்பையில் போட முடியும். ஆனால், இந்த நச்சை நீக்குவதற்கு அதிகம் செலவாகும்.
ஆனால், அதற்கு பதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அந்தப் பொருட்களை குப்பை என விற்பதன் மூலம், செலவுகளை குறைக்க முடியும். இதனால் மற்றநாடுகளுக்கு 90 சதவீத லாபம் கிடைக்கிறது.
இந்திய தொழிலதிபர்களும் இந்த மின்னணுக் கழிவை லாபம் இல்லாமல் வாங்குவது இல்லை. ரூ. 20 ஆயிரம் விலை கொடுத்து வாங்கும் ஒரு டன் மின்னணுக் கழிவில் இருந்து, 10 கிராம் தங்கம், 30 முதல் 40 கிலோ செம்பு, அலுமினியம், கொஞ்சம் வெள்ளி, சில நேரங்களில் பிளாட்டினம் ஆகியவையும் கிடைக்கின்றன. இதனால் ஒரு டன் குப்பையில் 40 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடிகிறது.
இதனாலேயே காசு கொடுத்து வெளிநாட்டு மின்னணுக் குப்பைகளை இந்திய தொழிலதிபர்கள் வாங்கி வருகின்றனர். இந்த வியாபாரத்தில் வெளிநாட்டுக்காரர்களுக்கும் லாபம், இந்திய தொழிலதிபர்களுக்கும் லாபம்.
இப்படியாக ஆண்டிற்கு சுமார் 50 ஆயிரம் டன் மின்னணு கழிவுகளை மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வாங்கி வருகிறது.
உண்மையில் இந்த வர்த்தகத்தால் பாதிக்கப்படுவது சுற்றுச்சூழலும், அடிநிலை ஊழியர்களும் தான்.
இந்தக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் வேலை செய்பவர்களுக்கு நச்சுப் பொருட்களால் புற்றுநோய், காச நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காசு கொடுத்து குப்பையை வாங்கும் இந்தியா

உலக நாடுகளின் மின்னணுக் கழிவு உள்ளிட்ட குப்பைகளை விலைக்கு வாங்கி, இந்தியத் தொழிலதிபர்கள் லாபம் பார்த்து வருவதன் மூலம் இந்தியா மிகப்பெரிய குப்பை கிடங்காக உருமாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்போது ஏற்பட்ட கட்டிடக் குப்பைகள் மற்றும் நச்சுக் கழிவுகள் அனைத்தும் பிரொஸ்னா, ஷென்குவான் ஹை, பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்கள் மூலம் இந்தியாவிற்கு, அதுவும் சென்னைக்கு வந்தன.
இந்த குப்பையில் அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின், பாலி குளோரினேடட் பைபினல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன.
ஆனால், வெளி உலகிற்குத் தெரியாமல் இது போன்று பல்வேறு வெளிநாட்டுக் குப்பைகள் இந்தியாவிற்கு வந்தவண்ணம் உள்ளன.
சுற்றுச்சூழலைக் குறித்துக் கவலைப்படாத இந்திய தொழிலதிபர்கள் சிலரின் பேராசையால் இந்தியா இவ்வாறு குப்பை மேடாக மாறி வருகிறது என்கிறது ஆய்வுகள்.
அதிலும் குறிப்பாக உலகநாடுகளுக்கு மின்னணுக் கழிவுகளைஅகற்றுவது தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவற்றிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கிய பின்தான், அவற்றை குப்பையில் போட முடியும். ஆனால், இந்த நச்சை நீக்குவதற்கு அதிகம் செலவாகும்.
ஆனால், அதற்கு பதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அந்தப் பொருட்களை குப்பை என விற்பதன் மூலம், செலவுகளை குறைக்க முடியும். இதனால் மற்றநாடுகளுக்கு 90 சதவீத லாபம் கிடைக்கிறது.
இந்திய தொழிலதிபர்களும் இந்த மின்னணுக் கழிவை லாபம் இல்லாமல் வாங்குவது இல்லை. ரூ. 20 ஆயிரம் விலை கொடுத்து வாங்கும் ஒரு டன் மின்னணுக் கழிவில் இருந்து, 10 கிராம் தங்கம், 30 முதல் 40 கிலோ செம்பு, அலுமினியம், கொஞ்சம் வெள்ளி, சில நேரங்களில் பிளாட்டினம் ஆகியவையும் கிடைக்கின்றன. இதனால் ஒரு டன் குப்பையில் 40 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடிகிறது.
இதனாலேயே காசு கொடுத்து வெளிநாட்டு மின்னணுக் குப்பைகளை இந்திய தொழிலதிபர்கள் வாங்கி வருகின்றனர். இந்த வியாபாரத்தில் வெளிநாட்டுக்காரர்களுக்கும் லாபம், இந்திய தொழிலதிபர்களுக்கும் லாபம்.
இப்படியாக ஆண்டிற்கு சுமார் 50 ஆயிரம் டன் மின்னணு கழிவுகளை மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வாங்கி வருகிறது.
உண்மையில் இந்த வர்த்தகத்தால் பாதிக்கப்படுவது சுற்றுச்சூழலும், அடிநிலை ஊழியர்களும் தான்.
இந்தக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் வேலை செய்பவர்களுக்கு நச்சுப் பொருட்களால் புற்றுநோய், காச நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Wednesday, 8 June 2016

Pan card

பான் கார்டு
நீங்கள் இந்திய பிரஜையாக இருந்தாலும் சரி அல்லது வெளி நாட்டில் வாழும் இந்தியராக இருந்தாலும் சரி, இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டினாலோ அல்லது பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ உங்களிடம் கண்டிப்பாக பான்(PAN) கார்டு இருக்க வேண்டும். பான் என்றால் என்ன? பான்(PAN) என்பதன் விரிவாக்கம் "பெர்மனெண்ட் அக்கௌன்ட் நம்பர்" (நிரந்தர கணக்கு எண்). இது ஒரு 10 இலக்கு வரிவடிவ எண் குறியீடு. இதனை ஒரு பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் இந்திய வருமான வரி துறை வழங்குகிறது. ஒவ்வொரு தனி நபர், ஹிந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் முதலியவற்றுக்கு ஒரு தனித்தன்மையான எண் வழங்கப்படும். இந்த என்னை பற்றி விரிவாக சிறிது நேரத்தில் பார்ப்போம். பான் என்பது ஒரு நிரந்தரமான எண்ணாகும். உங்கள் முகவரி மாறினாலோ அல்லது நீங்கள் வாழும் மாநிலத்தை மாற்றினாலோ இதில் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். பான் கார்டு வழங்கும் முக்கிய காரணம்? உலகளாவிய அடையாளத்தை ஏற்படுத்தவே. இதனை வைத்து வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் வரி கட்டுபவரின் இதர செயல்பாடுகளின் பல ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஒரு மையத்தில் இணைத்து கண்காணிக்கலாம். இதனை கண்காணிப்பதால் இவை மறைமுகமாக வரி ஏய்ப்பை தடுக்கிறது. இந்த எண் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அளிக்கும் சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு நிகரானவையாகும். பான் பற்றிய புனைகதை: பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பான்எண்கள் வருமான வரிக்காக தேவைபடுகிறது, ஆனால் அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பான் கார்டின் நகல் பல வணிக பரிமாற்றங்களுக்கு அடையாளத்தை நிரூபிக்க பயன்படுகிறது. உதாரணத்திற்கு புது வங்கி கணக்கு திறக்க, ஒரு சொத்தை அல்லது வண்டியை வாங்கவோ விற்கவோ, வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு பெற, டீமாட் மற்றும் மியூசுவல் பண்ட் போன்ற முதலீடுகள் செய்ய PAN கார்டின் நகல் தேவைப்படும். பான் கார்டிற்கு விண்ணப்பிக்க: பான் கார்டு வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் அதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதற்கு வயது, குடியுரிமை என்று எந்த வரம்பும் கிடையாது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மற்றும் பிறந்த குழந்தைக்கு கூட விண்ணப்பிக்கலாம். அவர்களுக்காக அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் கையெழுத்திட வேண்டும். புதிய பான்: - விண்ணப்பதாரர் இதற்கு முன் பான் கார்டிற்கு விண்ணப்பித்ததில்லை என்றாலும், அவருக்கு ஏற்கனவே பான் ஒதுக்கப்படாமல் இருந்தாலும் சரி, அவர் வருமான வரித்துறை (ITD) இணையதளத்திற்கு செல்லலாம். அவர்களுக்கு பான் ஒதுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதே முதல் படி. - ஒரு வேளை அவருக்கு பான் ஒதுக்கப்படாமல் இருந்தால் கீழ்கண்ட இணையதளத்தில் போய் விண்ணப்பிக்கலாம். அங்கயே உங்கள் விண்ணப்பத்தின் இருப்பு நிலையையும் அறிந்துக் கொள்ளலாம். அந்த இணையதளங்கள்: o யூடிய் பான்(UTI) கார்டு விண்ணப்ப படிவம் o என்ஸ்டிஎல்(NSDL) விண்ணப்ப படிவம் - பான் - நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமென்றால் உங்கள் அருகில் இருக்கும் டின்-பான்(TIN-PAN) மையங்கள், என்ஸ்டிஎல் டின்(NSDL-TIN) அல்லது யூடிய் பான்(UTI PAN) விண்ணப்ப மையத்தை அனுகலாம். புதிய பான் கார்டு விண்ணப்பிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து குறைந்தது இரண்டு அடையாள சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும்: - மெட்ரிகுலேஷன் சான்றிதழ் - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன பட்டம் - கடன் அட்டை - வங்கி அறிக்கை - ரேஷன் கார்டு - ஓட்டுனர் உரிமம் - வாக்காளர் அடையாள அட்டை - பாஸ்போர்ட் பான் கார்டின் மறு அச்சடிப்பு: - உங்களுக்கு பான் எண் ஒதுக்கப்பட்ட பின்பு, பான் கார்டை பெறுவதற்கு விண்ணப்பத்தை உபயோகிக்க வேண்டும். இந்த புது பான் கார்டில் அதே பான் எண் தான் இருக்கும். என்ஸடிஎல்(NDSL) இணையதளத்திற்கு சென்று மறு அச்சடிப்புக்கு விண்ணப்பிக்கலாம். என்ஸடிஎல் மற்றும் யூடிய் இணையதளங்களில் உங்கள் பான் எண்ணை தேடி கண்டுப்பிடிக்கலாம். பான் எண்ணுடைய அமைப்பு: பான் எண்களின் புதிய அமைப்பு போனெடிக் சவுண்டெக்ஸ் கோட் நெறிமுறைபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு எண்ணும் தனித்தன்மையுடன் விளங்கும். இது போனெடிக் பான் (PAN) எண் உருவாக உதவி புரியும்: i. வரி கட்டுபவரின் முழுப்பெயர் ii. பிறந்த தேதி/நிறுவனம் தோன்றிய தேதி iii. ஸ்டேடஸ் iv. தனி நபர் என்றால் பாலினம் v. தனி நபர் என்றால் தந்தையின் பெயர் (திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி). பான் கார்டு வழங்கப்பட்ட தேதி பான் கார்டில் உங்கள் புகைப்படத்திற்கு வலது பக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும். 10 இலக்கு வரிவடிவ எண்ணின் வரிசை: பான் எண்ணின் 10 இலக்கு எண்ணின் வரிசையத்தை பற்றி விலாவரியாக பார்ப்போமா: 1. முதல் ஐந்து எழுத்துக்கள் முக்கியமானவை. அவை வரிவடிவ எண் அமைப்போடு இருக்கும். 2. அவைகளில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசைப்படி அமைந்திருக்கும். இந்த வரிசையம் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும். 3. நான்காவது எழுத்து விண்ணப்பதாரரை பொறுத்து தீர்மானிக்கப்படும்: C - குழுமம் (கம்பெனி) P - தனி நபர் H - ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) F - நிறுவனம் A - தனி நபர்களின் இணக்கம் (AOP) T - அறக்கட்டளை B - பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) L - லோக்கல் அதாரிட்டி J - செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் G - அரசாங்கம் (உதாரணம் - கம்பெனி = AAACA; செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் = AAAJA; HUF = AAAHA;) 4. ஐந்தாவது எழுத்து கீழ்கண்டவைகளின் முதல் எழுத்தாகும்: a) தனிநபர் என்றால் உங்கள் குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது b) மற்ற அனைவருக்கும் தங்களின் நிறுவனம், டிரஸ்ட், குழுமம் போன்றவற்றின் முதல் எழுத்து. (உதாரணத்திற்கு - லிசா சனமொலு [தனிநபர்] = AAAPC4444A; லிசா சனமொலு [HUF] = AAAHL4444A; பொது நிறுவனம் = AAAFG4444A) 5. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-லிருந்து 9999 வரை செல்லும் வரிசைய எண்கள். 6. கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த சரிபார்ப்பு இலக்கம் புதிய போனெடிக் பான் (PPAN): புதிய போனெடிக் பான் (PPAN)-ஆல் ஒரே பெயரைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பான்-னிற்கு மேல் ஒதுக்கப்படும் தவறு நடக்காது. பொருந்தும் பான் கார்டு கண்டுபிடிக்கப்பட்டால், பயனாளிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்படும். இரட்டிப்பான பான் கார்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்படும். இந்த நேரத்தில் சரிப்பார்க்கும் அதிகாரி இந்த பான் கார்டு இரட்டிப்பை நிராகரித்தால் தான் புதிய பான் ஒடுக்கப்படும். இந்த புதிய அமைப்பின் படி ஒரு தனித்துவம் பெற்ற பான் எண்ணை வரி கட்டுபவர்கள் 17 கோடி பேருக்கு ஒதுக்கலாம். முடிவுரை: உங்கள் பான் கார்டின் முக்கியத்துவத்தை, அந்த கார்டு மற்றும் பான் எண்ணின் தேவைகளை இப்போது புரிந்திருப்பீர்கள். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் சிறிது நேரம் செலவழித்து இன்றே விண்ணப்பம் செய்யவும்.