எக்ஸ்போர்ட் கம்பெனி தொடங்குவது எப்படி?
கீழ்கண்ட மூன்று வகைகளில் ஏதேனும் ஒரு வகையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
1. Proprietor( நீங்கள் ஒருவரே முதலாளி)
2. Partnership ( சிலர் சேர்ந்து செயல்படுவது)
3. Private Limited( பலர் சேர்ந்து செயல்படுவது)
அடுத்த்து நீங்கள் எந்த வகையான ஏற்றுமதியாளர் என்பதை முடிவெடுக்க வேண்டும்.
1. Merchant Exporter(பொருட்களை பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்வது)
2. Manufacturer Exporter(பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது)
இந்த விசயங்களை முடிவு பண்ணிய பிறகு நிறுவனத்திற்கு பெயர் வைக்க வேண்டும்.
For example :-
GREAT INDIA EXPORTS
DELUXE FURNITURE EXPORTS
SKY AND EARTH EXIM
RELISH FOREIGN TRADE
ROYAL INTERNATIONAL etc,
உங்கள் விருப்ப படி ஏதேனும் ஓர் பெயர் வைத்துக்கொள்ளுஙகள்.
அதன் பின் Gmail, Yahoo,Rediffmail போன்ற ஏதாவது ஒன்றில், ஓரு இலவச Email ஆரம்பித்துக்கொள்ளவும்.
For Example:-
greatindiaexports@gmail.com
royalinternational@yahoo.co.in
skyandearth@rediffmail.comஎன்பது போன்று.
கம்பெனிக்கு பெயர் வைத்தாயிற்று, Email Id, தொடங்கியாச்சு. இப்பொழுது visiting card, Letter head,envelope,round seal , For Seal, போன்றவற்றையும் தயார் செய்து கொள்ளுங்கள். இதெல்லாம்,உங்கள் கம்பெனியை register செய்ய, வங்கியில் நடப்புகணக்கு(current account) தொடங்க, ஏற்றுமதி-இறக்குமதி லைசென்ஸ் (I.E.Code) வாங்க என்று பல இடங்களில் உதவியாக இருக்கும்.
ஏற்றுமதி-இறக்குமதி லைசென்ஸ்( I.E.CODE) பெறுவது எப்படி?
I.E Code application-யை http://www.dgft.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று download செய்து கொள்ளலாம்.
அல்லது நேரடியாக “வெளி நாட்டு வாணிபத்திற்கான இயக்குனரகத்திலும் சென்று வாங்கலாம்.
Chennai Director General Of Foreign Trade
Shastri Bhawan Annex, 26, Haddows Road,
Nungambakkam, Chennai 600006
E-Mail: zjdgft@tn.nic.in
Tel: 044-28283404/08
Fax: 044-28283403
Coimbatore
Joint Director General of Foreign Trade,
1544, India Life Building, (Annex. 1st Floor),
Tirchy Road,
Coimbatore – 611 018
Tel: 0422-2300947
FAX: 0422-2300846
E-Mail: jdgft@jdgcbe.tn.nic.in
Territory: Districts of Tamil Nadu – Coimbatore, Nilgiris, Periyar, Salem, Karur, Namakkal
Madurai
The Joint Director General of Foreign Trade,
Plot No.117, Ist Main Road, K.K. Nagar,
Madurai – 625 020
Tel: 0452-2586485
Fax: 0452-2586485
E-Mail: jdgft_mdu@yahoo.com
Territory: Districts of – Madurai, Theni.Dindigul, Ramnad, Virudhunagar, Sivaganga, Tirunelveli, Tuticorin, Kanyakumari
இத்தொழிலைப் பற்றி தெரியாமல் அரை குறை அறிவுடன் ஈடுபட்டு சிலர் தோல்வியடைவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். நுணுக்கமான தொழிலாக கருதப்படும் இந்த வெளி நாட்டு வணிகம் புரிய நினைப்பவர்கள் ஏதாவது ஒரு சிறந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு, அதன் பின் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.8 வயதிற்கு மேல் உள்ள எவரும் ஏற்றுமதி-இறக்குமதி லைசென்ஸ் பெற்று வியாபாரம் செய்யலாம். ஆங்கிலத்தில் எழுதப் படிக்கவும், இண்டெர்நெட் பயன்படுத்தவும் தெரிந்திருந்தால் இத்துறையில் குறுகிய காலத்தில் ஜெயிக்கலாம்.
பொருட்களை உற்பத்தி செய்தும், உற்பத்தி செய்பவர்களிடம் தரமான பொருட்களை வாங்கியும் ஏற்றுமதி செய்யலாம். இதற்கென்று பணியாட்களோ , அலுவலகமோ தேவையில்லை.உங்கள் வீட்டையே கூட அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சாமானியர் கூட ஏற்றுமதி செய்ய முன் வரனும் என்ற நோக்கத்தில் தான் அரசாங்கம் ரூ.250/-யை லைசென்ஸ் கட்டணமாக நிர்ணயித்துள்ளது.விண்ணப்பித்த மூன்று நாட்களில் உங்கள் வீட்டிற்க்கு வந்தடையும்.
ஏற்றுமதி செய்பவர்களுக்கு உதவுவதற்கென்றே நாற்பதுக்கும் மேற்பட்ட வளர்ச்சி நிறுவனங்கள் உள்ளன.அரசும் பல சலுகைகளையும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.
சுமார் 11500க்கும் அதிகமான பொருட்கள், 200க்கும் மேலான நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகின்றது.
முதன் முதலாக ஏற்றுமதி செய்பவர்கள், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அந்த நாட்டுக்கு பொருட்களை அனுப்பலாம். சின்ன சின்ன ஆர்டர்கள் எடுத்து, இறக்குமதியாளருக்கு அனுப்பி, அனுபவப்பட்ட பின் படிப்படியாக பெரிய ஆர்டராக எடுத்து செய்தால் நல்லது. நீஙகள் அனுப்பும் பொருட்கள் தரமாக இருக்கும் பட்சத்தில் ஆர்டர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். குறுகிய காலத்தில் நேர்மையான முறையில் அதிகம் சம்பாதித்து உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துங்கள்.
தனி நபரின் பெயரில் நீங்கள் ஏற்றுமதி செய்ய முடியாது . ஆதலால் நீங்கள் ஒரு நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் தான் ஏற்றுமதி செய்யமுடியும்.
Sunday, 31 July 2016
Export
எக்ஸ்போர்ட் கம்பெனி தொடங்குவது எப்படி?
கீழ்கண்ட மூன்று வகைகளில் ஏதேனும் ஒரு வகையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
1. Proprietor( நீங்கள் ஒருவரே முதலாளி)
2. Partnership ( சிலர் சேர்ந்து செயல்படுவது)
3. Private Limited( பலர் சேர்ந்து செயல்படுவது)
அடுத்த்து நீங்கள் எந்த வகையான ஏற்றுமதியாளர் என்பதை முடிவெடுக்க வேண்டும்.
1. Merchant Exporter(பொருட்களை பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்வது)
2. Manufacturer Exporter(பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது)
இந்த விசயங்களை முடிவு பண்ணிய பிறகு நிறுவனத்திற்கு பெயர் வைக்க வேண்டும்.
For example :-
GREAT INDIA EXPORTS
DELUXE FURNITURE EXPORTS
SKY AND EARTH EXIM
RELISH FOREIGN TRADE
ROYAL INTERNATIONAL etc,
உங்கள் விருப்ப படி ஏதேனும் ஓர் பெயர் வைத்துக்கொள்ளுஙகள்.
அதன் பின் Gmail, Yahoo,Rediffmail போன்ற ஏதாவது ஒன்றில், ஓரு இலவச Email ஆரம்பித்துக்கொள்ளவும்.
For Example:-
greatindiaexports@gmail.com
royalinternational@yahoo.co.in
skyandearth@rediffmail.comஎன்பது போன்று.
கம்பெனிக்கு பெயர் வைத்தாயிற்று, Email Id, தொடங்கியாச்சு. இப்பொழுது visiting card, Letter head,envelope,round seal , For Seal, போன்றவற்றையும் தயார் செய்து கொள்ளுங்கள். இதெல்லாம்,உங்கள் கம்பெனியை register செய்ய, வங்கியில் நடப்புகணக்கு(current account) தொடங்க, ஏற்றுமதி-இறக்குமதி லைசென்ஸ் (I.E.Code) வாங்க என்று பல இடங்களில் உதவியாக இருக்கும்.
ஏற்றுமதி-இறக்குமதி லைசென்ஸ்( I.E.CODE) பெறுவது எப்படி?
I.E Code application-யை http://www.dgft.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று download செய்து கொள்ளலாம்.
அல்லது நேரடியாக “வெளி நாட்டு வாணிபத்திற்கான இயக்குனரகத்திலும் சென்று வாங்கலாம்.
Chennai Director General Of Foreign Trade
Shastri Bhawan Annex, 26, Haddows Road,
Nungambakkam, Chennai 600006
E-Mail: zjdgft@tn.nic.in
Tel: 044-28283404/08
Fax: 044-28283403
Coimbatore
Joint Director General of Foreign Trade,
1544, India Life Building, (Annex. 1st Floor),
Tirchy Road,
Coimbatore – 611 018
Tel: 0422-2300947
FAX: 0422-2300846
E-Mail: jdgft@jdgcbe.tn.nic.in
Territory: Districts of Tamil Nadu – Coimbatore, Nilgiris, Periyar, Salem, Karur, Namakkal
Madurai
The Joint Director General of Foreign Trade,
Plot No.117, Ist Main Road, K.K. Nagar,
Madurai – 625 020
Tel: 0452-2586485
Fax: 0452-2586485
E-Mail: jdgft_mdu@yahoo.com
Territory: Districts of – Madurai, Theni.Dindigul, Ramnad, Virudhunagar, Sivaganga, Tirunelveli, Tuticorin, Kanyakumari
இத்தொழிலைப் பற்றி தெரியாமல் அரை குறை அறிவுடன் ஈடுபட்டு சிலர் தோல்வியடைவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். நுணுக்கமான தொழிலாக கருதப்படும் இந்த வெளி நாட்டு வணிகம் புரிய நினைப்பவர்கள் ஏதாவது ஒரு சிறந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு, அதன் பின் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.8 வயதிற்கு மேல் உள்ள எவரும் ஏற்றுமதி-இறக்குமதி லைசென்ஸ் பெற்று வியாபாரம் செய்யலாம். ஆங்கிலத்தில் எழுதப் படிக்கவும், இண்டெர்நெட் பயன்படுத்தவும் தெரிந்திருந்தால் இத்துறையில் குறுகிய காலத்தில் ஜெயிக்கலாம்.
பொருட்களை உற்பத்தி செய்தும், உற்பத்தி செய்பவர்களிடம் தரமான பொருட்களை வாங்கியும் ஏற்றுமதி செய்யலாம். இதற்கென்று பணியாட்களோ , அலுவலகமோ தேவையில்லை.உங்கள் வீட்டையே கூட அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். சாமானியர் கூட ஏற்றுமதி செய்ய முன் வரனும் என்ற நோக்கத்தில் தான் அரசாங்கம் ரூ.250/-யை லைசென்ஸ் கட்டணமாக நிர்ணயித்துள்ளது.விண்ணப்பித்த மூன்று நாட்களில் உங்கள் வீட்டிற்க்கு வந்தடையும்.
ஏற்றுமதி செய்பவர்களுக்கு உதவுவதற்கென்றே நாற்பதுக்கும் மேற்பட்ட வளர்ச்சி நிறுவனங்கள் உள்ளன.அரசும் பல சலுகைகளையும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.
சுமார் 11500க்கும் அதிகமான பொருட்கள், 200க்கும் மேலான நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகின்றது.
முதன் முதலாக ஏற்றுமதி செய்பவர்கள், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அந்த நாட்டுக்கு பொருட்களை அனுப்பலாம். சின்ன சின்ன ஆர்டர்கள் எடுத்து, இறக்குமதியாளருக்கு அனுப்பி, அனுபவப்பட்ட பின் படிப்படியாக பெரிய ஆர்டராக எடுத்து செய்தால் நல்லது. நீஙகள் அனுப்பும் பொருட்கள் தரமாக இருக்கும் பட்சத்தில் ஆர்டர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். குறுகிய காலத்தில் நேர்மையான முறையில் அதிகம் சம்பாதித்து உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துங்கள்.
தனி நபரின் பெயரில் நீங்கள் ஏற்றுமதி செய்ய முடியாது . ஆதலால் நீங்கள் ஒரு நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் தான் ஏற்றுமதி செய்யமுடி
TIN Number
டின் (TIN) நம்பர்
ஒரு வியாபாரம் துவங்குவதிற்கு டாக்ஸ் அடையாள என் என்று சொல்லப்படும் டின் தமிழக அரசினால் கொடுக்கப்படும் சான்றிதழ் தான் டின் நம்பர் (TIN NO).
டின் நம்பர் ஏன் வாங்க வேண்டும் ?
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின் படி உற்பத்தி செய்யும் அனனத்து பொருளுக்கும் , குறிப்பிட்ட ஒரு சில பொருட்களை தவிர மற்ற பொருட்களுக்கு வரி கொடுத்து தான் வாங்க வேண்டும். வரி வாங்கித்தான் விற்க வேண்டும்.
ஒருவர் தொழில் தொடங்கவேண்டுமானால் மாவட்ட வணிகவரி மையத்தில் மனு செய்யவேண்டும் [ GOVERMENT OF TAMIL NADU COMMERCIAL TAXES DEPARTMENT ] 11 இலக்கம் கொண்ட Tin Number தருவார்கள் இது இந்தியா முழுவதும் தொழில் செய்ய பொருந்தக்கூடியதாக இருக்கும்.
மனு செய்யும் முறை பற்றி பார்ப்போம் :
1. நம் புகைப்படம்
2.ரேசன் கார்டு ஜெராக்ஸ்
3. PAN கார்டு ஜெராக்ஸ் [ Proprietor ]
4. சொத்து சம்மந்தப்பட்ட டாக்குமெண்டுஸ் ஜெராக்ஸ்
5. வாடகை ஒப்பந்த பத்திரம் ஜெராக்ஸ்
6. Form F Form A பூர்த்தி செய்யவேண்டும்
7. Rs. 500/- ரூபாய்க்கு DD எடுக்கவேண்டும்
8. ஏற்கனவே TIN NO உள்ளவர்களின் பரிந்துரை கடிதம் 2 வேண்டும்.
இவற்றை சமர்பித்தால் ஒரு வாரத்தில் நம் முகவரி தேடி நமக்கு டின் நம்பர் சர்டிபிகேட் வந்துவிடும் அதன் பிறகுதான் Bank A/C திறக்க முடியும் எல்லாம் முடிந்தவுடன் வியாபாரத்தை துவங்கலா
Consumer
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ... ! வழக்கறிஞர் ராசா துரியன்
‹ Home
View web version
Friday, 27 March 2015
Advocate Rasa Dhuriyan at 07:03
No comments:
உண்மை ஊமையாகி தலைகவிழ
பொய் சபையிலேறி இறுமாப்புடன்
சப்தமிட்டு சிரிக்கும்
வானுக்கு தூணுண்டு என்பதையும்
கடலுக்கு தாழ் உண்டு என்பதையும்
வக்கீலின் வாதத் திறமை நிரூபிக்கும்
உடைமை கொள்ள, உயிர் கொல்ல
இடையில் மறைத்த உடைவாளை
இரக்கமின்றி இதயத்தில்
பாய்ச்சுவான் ஒருவன்
பிறர் உயிர் துடிக்க சகியாது
அதை ஓடி வந்து பிடுங்கி
காப்பாற்ற நினைப்பான்
கருணையுள்ள ஒருத்தன்
கடைசியில் கருணை மனிதனை
காக்கிச் சட்டைகள்
அள்ளிக் கொண்டு
சிட்டாய்ப் பறக்கும்
கடுங் காவலில் வைக்கும்
நீதியை வேண்டி
கறுப்புக் கோட் வாதாட
காக்கிச் சட்டைகள்
கண்ணால் கண்டதைச் சொல்லும்
அந்தக் கைதிக்கோ இவர்கள்தான்
கடவுள் அன்று
கைரேகை சாட்சியம்
கருணை உள்ளவனை
காட்டிக் கொடுக்க
கட்டியங் கூறும்
கம்பியின் பின்னால்
கைதியாய் அவன் நிற்க
சட்டைப் பைக்குள் துட்டைத் திணித்து
சட்டத்தை விலைக்கு வாங்கி
தப்பித்து விடுவான்
சமர் செய்த சண்டாளன்
“தகுந்த சாட்சியம் இல்ல”
சட்டம் சப்தமின்றி உறங்கிப் போகும்.
Share
Saturday, 21 March 2015
Advocate Rasa Dhuriyan at 02:20
No comments:
Government Law College, Chengalpattu
Share
Thursday, 19 March 2015
Advocate Rasa Dhuriyan at 06:16
No comments:
"மனித உரிமை'
"மனித உரிமை' என்ற வார்த்தையை, தனியார் அமைப்புகள் பயன்படுத்த கூடாது என்ற உத்தரவை மீறி செயல்பட்ட, ஆறு தனியார் அமைப்புகள் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளின்படி, சென்னை உயர்நீதிமன்றம், மனித உரிமைகள் (ஏதட்ச்ண கீடிஞ்டtண்) என்ற வார்த்தையை, எந்தவித தனியார் அமைப்புகளும் பயன்படுத்தக் கூடாது என, தடை உத்தரவிட்டுள்ளது. இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில், ஒருசில தனியார் தன்னார்வ அமைப்புகள், மனித உரிமைகள் கழகம் என்ற அர்த்தத்தில் நடத்தி வருகின்றன.மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில், பொதுமக்களிடம் தவறான அணுகுமுறையை கையாண்டு வருவதாக, புகாரும் வந்தது. அதன்பேரில், மாவட்ட சட்ட ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.அதையடுத்து. நாமக்கல், புதுச்சத்திரம், மோகனூர், பள்ளிபாளையம், ப.வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய ஆறு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், செயல்பட்டு வந்த ஆறு அமைப்புகள் மீது, போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும், "மனித உரிமை' என்ற வாசகத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனியார் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு, ஏதேனும் அமைப்புகள் செயல்பட்டால், பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த 3 மனித உரிமைகள் அமைப்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அனுமதியின்றி மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் நாகேந்திரன் தலைமையிலான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்பு, ரவுண்டு ரோடு பகுதியில் பாலமுருகன் குழு சார்பில் செயல்பட்டு வந்த மனித உரிமை கழகம், ஏஎம்சி சாலையில் தென்னிந்திய மனித உரிமை கழகம் என்ற பெயரில் நடத்தி வந்த முருகேசன் குழுவை சேர்ந்தவர்கள் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் வழக்குப்பதிவு செய்தார்.மேலும் அனுமதியின்றி மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற அமைப்புகளிடம் பொதுமக்கள் சென்று ஏமாறவேண்டாம் என்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மனித உரிமைகள் (ஹியூமன் ரைட்ஸ்) என்ற அடைமொழியுடன் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்யப்படாமல் போலியாக செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ‘‘மனித உரிமைகள்’’ என்ற அடைமொழியுடன் பதிவு செய்யப்படாத போலியாக செயல்படும் அமைப்புகள் உள்ளதா? என்று போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் அம்பையில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு போலியாக செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் பயன்படுத்திய ரப்பர் சீல்கள், கார்டுகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பை நடத்திய அம்பையை சேர்ந்த சுப்பிரமணியன், ஆனந்தி ஆகிய 2 பேர் மீது அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் மணிகண்டன் என்பவரும் இது போல போலியாக அமைப்பு நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகிரியில் டேனியல் என்பவர் போலியாக மனித உரிமைகள் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வந்துள்ளார். அவரிடமும் சீல் முதலியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
"மனித உரிமை' என்ற
வார்த்தையை, தனியார்
அமைப்புகள் பயன்படுத்த
கூடாது என்ற உத்தரவை மீறி
செயல்பட்ட, ஆறு தனியார்
அமைப்புகள் மீது, போலீஸார்
Share
Advocate Rasa Dhuriyan at 06:14
No comments:
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி?
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ வாங்கித்தர முடியும். நுகர்வோருக்கான நஷ்ட ஈட்டையும் பெற முடியும். இதற்காக 24 டிசம்பர் 1986 அன்று கொண்டுவரப்பட்டது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். இதன்படி வங்கி, காப்பீடு, நிதி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவ சேவை, உணவு விடுதி, மின்சாரம் என எந்த விஷயங்களில் நுகர்வோரின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் நுகர்வோர் மன்றத்தை அணுகலாம். நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி? என்னென்னெ ஆவணங்கள் தேவை ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நுகர்வோர் என்பவர் யார்?
ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ பணம் கொடுத்துப் பெறும் யாவரும் நுகர்வோர்களே.
உதாரணமாக: மளிகைக் கடையில் பொருள் வாங்கினாலும், மருத்துவமனையில் காய்ச்சலுக்குப் பார்த்தாலும் நீங்கள் நுகர்வோரே.
யார் / யாரெல்லாம் புகாரளிக்கலாம்?
ஒரு சேவையைப் பெறுகிற, பொருளை வாங்குகிற எந்த ஒரு நுகர்வோரோ, பதிவு செய்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளோ புகார் அளிக்கலாம். தனி நபராகவோ, ஒரே நோக்கம் கொண்ட பல நுகர்வோர்களின் சார்பாக கூட்டாகவோ புகாரளிக்கலாம்.
ஒரு சேவையை அல்லது பொருளை மற்றவர்களுக்கு விற்பதற்காக வாங்குகிற அல்லது மதிப்புக் கூட்டி விற்கிறவர்கள் நுகர்வோர் அல்ல.
ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க வேண்டும்?
காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்த்து குறுகிய காலத்திலும், அதே சமயம் அதிக செலவில்லாமலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க எல்லா மாவட்டங்களிலும் நுகர்வோர் மன்றம் செயல்படுகின்றன.
நுகர்வோருக்கு சேவைக்குறைபாடு ஏற்பட்டு அதை கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவித்தும் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் மன்றத்தை அணுக வேண்டும்.
எங்கே புகாரளிப்பது?
நுகர்வோர் எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அங்கே புகாரளிக்கலாம் அல்லது எந்த இடத்தில் பொருள் வாங்கப்பட்டதோ அல்லது எந்த இடத்தில் நுகர்வோர் உரிமை மீறப்பட்டதோ அந்த இடத்திற்குட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து, இதற்கான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து பொருள் மதிப்பிற்குத் தகுந்தவாறு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ, விரைவுத் தபால் மூலமாகவோ வழக்குகளைப் பதிவு செய்து, இந்த வழக்கின் நகலை எதிர்த்தரப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
கட்டணம் எவ்வளவு?
1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = a100 /-
1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கத் தேவையான தகுதிகள்:
· புகாரளிப்பவர் நுகர்வோராக இருக்க வேண்டும் அல்லது அவர் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
· சேவைக் குறைபாடு அல்லது பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.
· எந்த ஒரு புகாருக்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க ஆதாரங்கள் அவசியம். எனவே எந்த சேவைக் குறைபாடு ஏற்படுகிறதோ அவர்களிடம் முதலில் புகார் செய்ததற்கான ஒளி நகல், பொருள் / சேவை பெற்ற ரசீதுகள், கடிதப் போக்குவரத்துகள் என அனைத்து ரசீதுகளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் குறைபாட்டைப் பொறுத்து
ஆதாரங்களின் தன்மையும் வேறுபடும்.
யார் மீதெல்லாம் புகாரளிக்க முடியும்?
நுகர்வோருக்குப் பொருட்களை விற்பனை செய்யும், பணம் பெற்றுக் கொண்டு சேவையை வழங்கும் எந்த நிறுவனத்தின் மீதும் புகாரளிக்க முடியும். அரசுத் துறை, தனியார் துறை என்ற பாகுபாடு கிடையாது.
ஆன்லைனில் புகாரளிக்க:
· நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் பேச்சுவார்த்தைக்கு அல்லது உடனடி நிவாரணம் கிடைக்க மாநில நுகர்வோர் உதவி மையத்தை அணுகலாம். நுகர்வோர் தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டைக் கூறி அதற்கு ஆலோசனை பெறலாம். பின்னர் இவர்களது வழிகாட்டுதலின்படி நுகர்வோர் மன்றத்தை அணுகலாம்.
· மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொடர்பு எண் 044 – 2859 2828. இந்த எண்ணுக்கு அழைத்ததும் 9 என்ற எண்ணை அழுத்தினால், புகார்களை தெரிவிக்கலாம். 1 என்ற எண்ணை அழுத்தினால், நுகர்வோருக்கான உரிமைகள் என்ன? நுகர்வோரின் கடமைகள் என்ன போன்ற விவரங்களைப் பதிவு செய்யப்பட்ட குரலில் கேட்கலாம்.
· consumer@tn.gov.in, schtamilnadu@gmail.comஎன்ற மின்னஞ்சலிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரியில் தபாலிலோ, நேரிலோ புகார் அளிக்கலாம்.
www.consumer.tn.gov.in என்கிற இத்தளத்திற்கும் செல்லலாம்.
விரிவான விளக்கங்களை உதாரணங்களுடன், ‘புதிய தலைமுறை’ வெளியிட்டிருக்கும் ‘கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்’ என்ற நூலில் தெரிந்துகொள்ளலாம். இந்தப் புத்தகத்தை தபாலில் பெற 044-45969717 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Engineering
Jul 23, 2016
பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் காலியிடங்கள்ஏன்? - அதிக கல்லூரிகளா? கல்வித்தரம் குறைவா? வேலைவாய்ப்பு இன்மையா?

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துபொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சம் காலியிடங்கள் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளா?, கல்வித்தரம் குறைவா? அல்லது வே்லை வாய்ப்பின்மையா? என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 523 பொறியியல் கல்லூரி கள் உள்ளன. இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பிஇ, பிடெக். இடங் களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. பொறி யியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 34 ஆயி ரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். பொது கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், மொத்தம் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியிருக்கின்றன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 648 இடங்கள் காலியாகவுள்ள உள்ளன. பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் இந்த அளவுக்கு அதிகரிப்பதற்கான காரணங்கள்குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-முன்னாள் துணைவேந்தர் ஏ.கலாநிதி:தற்போது இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலே வேலைவாய்ப்பு பிரச்சினை நிலவுகிறது. வெளிநாடுகளில் தொழில் மந்த நிலை முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவில் அது இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் முன்பைவிட இப்போது குறைந்துள்ளன. 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு களைப் பார்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அமைப்பானது பொறியியல் படிப்பில் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கியது மிகப்பெரிய தவறு. புகழ்பெற்ற தனியார் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளைப் பார்த்தும் அவற்றின் உரிமையாளர்களின் செல்வச்செழிப்பை பார்த்தும் ஏராளமானோர் புதிதாக பொறியியல் கல்லூரிகளை தொடங்கிவிடுகிறார்கள். புதிய கல்லூரிகளுக்கான தேவை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்கொள்ளப்படவே இல்லை. புதிதாக அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா, தகுதியான பேராசிரியர்கள் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வுசெய்ய வரும் ஏஐசிடிஇ குழுவினர் பெயரளவுக்கு ஆய்வுசெய்துவிட்டு இஷ்டத்துக்கு அனுமதி வழங்கிவிடு கிறார்கள்.
இதனால், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது. நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய படிப்புகளை அறிமுகப் படுத்தாததால் காலியிடங்கள் அதிகரித் துள்ளன என்ற கருத்தை ஏற்க முடியாது. தற்போதைய படிப்பிலே நானோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய பாடங்களை தெரிவு பாடங்களாக (எலெக்டிவ் சப்ஜெக்ட்)எடுத்து படிக்கலாம்.முன்னாள் துணைவேந்தர் டி.விஸ்வநாதன்:தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ் 2 முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அவர்கள் பொறியியல் படிப்பதற்கு தேவையான கல்லூரிகள் உள்ளன. ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தரமான பேராசிரியர்கள் இருக்கின்றார்களா என்றால் இல்லை. தகுதியான ஆசிரியர்கள் இருந்தால் தரமான கல்வி கிடைக்கும். தரமான கல்வி பெறும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். பொறியியல் துறையில் வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கவே செய்கின்றன. தரமான கல்வி கிடைக்காததால்தான் மாணவர்கள் படித்துமுடித்துவிட்டு வேலையில்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர்:
இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பொறியியல் கல்லூரிகளின்எண்ணிக்கை மிக மிக அதிகம். அரசு கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என பலதரப்பட்ட கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். தற்போது பொறியியல் படிப்பில் சேருவோரில் 68 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள். எஞ்சிய 32 சதவீதம் பேர்தான் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிராமப்புற மாணவர்கள் வேலைநோக்கில்தான் பொறியியல் படிப்பை தேர்வுசெய்கிறார்கள். பலரின் எண்ணமும் சாப்ட்வேர் பணியில் சேருவதாகத்தான் இருக்கிறது. வேலை வாய்ப்பை பொருத்தவரையில் 92 சதவீதம் தகவல்தொழில்நுட்பம் சார்ந்ததாகவே உள்ளது. எனவேதான் பெரும்பாலான மாண வர்கள் இசிஇ, ஐடி பிரிவுகளில் சேர விரும்புகிறார்கள். தற்போதைய சூழலில் வேலையளிக்கும் நிறுவனங்களின் போக் கும் மாறியிருக்கிறது. பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தால் அவர்களுக்கு 25 ஆயிரம்சம்பளம் கொடுக்க வேண்டும். அதே வேலைக்கு சற்று பயிற்சி கொடுத்தால் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்த பட்டதாரிகளை வைத்து பணியைச் செய்யலாம். அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர்.போதிய அளவு மாணவர்கள் சேராததால் கடந்த ஆண்டு 22 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டும் அதுபோன்று பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படும். எனவே, அடுத்த ஆண்டு நிலைமை ஓரளவுக்குச் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.
No comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Links to this post
Powered by Blogger.
